வாழ்க்கையில் சில தருணங்களில் நடக்கும் நிகழ்வுகள் பல வருடங்களுக்கு நமக்குள் ஓடி கொண்டே இருக்கும். அதிலும் எதிர்பாராமல் நிகழும் எதார்த்தங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உதாரணமாக நம்மை கடந்து போகும் அறிமுகம் இல்லாத ஒருவர் பலநாள் பழகியவரை போல் நடந்து கொண்டால் சற்று யோசிக்கதானே வேண்டும். அதிலும் இந்த மாதிரி பழகி கொள்ளையடிக்கும் கும்பலும் உண்டு. ஆனால் நிமிடத்தில் பழக்கம் ஆகி உயிர் உள்ளவரை நினைத்து பார்க்கும் அளவுக்கும் சில நிகழ்வுகள் நடக்கும்..., என் வாழ்வில் நடந்தும்விட்டது.




Hi என்னோட blog -க்கு வந்ததற்க்கு முதலில் என் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் இராஜன், ஆனால் என்னை சிவா என்றும் இராஜா, இராஜி என்று கூப்பிட்டவர்களே அதிகம். இதில் விதவிதமான பட்ட பெயர்கள்( கரியன், கருவாயன், கரிஷ்மா ). நடிகர் அஜித் மற்றும் இந்தியன் கிரிக்கெட் player Zaheer Khan ரசிகன் என்பதால் என்னை "தல" மற்றும் "இராஜன்கான்" என்ற பெயர்களும் உண்டு.நான் புக்கத்துறை என்ற கிராமத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த வருடம் என் பள்ளியில் நான்தான் Student Number 1 . பிறகு வேடந்தாங்கல் அருகில் உள்ள வேடவாக்கம் என்னும் கிராமத்துக்கு மாறினோம். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் Diploma Computer Engg ., படித்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. Final Year ( 2008 ) படிக்கும் போது Campus Interview -வில் select ஆகி Chennai -யில் Web Designing வேலை செய்கிறேன். கவிதை, கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன். 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு கிரிக்கெட்டில் bowling போடவே பிடிக்கும். மெதுவாக உருண்டு வரும் பந்தை கூ ட விழுந்து fielding செய்வேன். ஏனோ தோட்டம் என்ற பெயரில் பல பல செடிகளை நட்டு அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் கொள்ளை பிரியம்.சிறு வயதில் இருந்தே நான் என் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்ததால் என்னவோ எனக்கு கூட்டத்தில் இருப்பதை விட தனிமையே அதிகம் பிடிக்கும். எல்லோரிடமும் கொஞ்சம் கூட பேசாதவன் என்றாலும் பேசும் சிலரிடம் அதிகமாக பேசுவேன். மொத்தத்தில் நான் ஒரு “Reserved Character” . இங்கே என்னுடைய படைப்புகளை படித்து ரசித்து விட்டு உங்கள் மனம் சொல்லும் கருத்துகளை தெரிவியுங்கள். பெயர் : M . இராஜன்ஊர் : வேடவாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம்பிறந்த தேதி : 30th செப்டம்பர்உயரம் : 5 feet 10 inches இரத்தம் : 'o ' +ve மேலும் என்னை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
மகேந்திர சிங் டோனி: ஜூலை 7, 1981-ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தார். ஏழ்மையான குடும்பம். இளம் வயதில் பிடித்த விளையாட்டு கால்பந்து. கூடவே பேட்மின்டன். கால்பந்தில் டோனி ஒரு கோல் கீப்பர். ஒருநாள், கிரிக்கெட் போட்டி அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டது. டோனியை கீப்பிங் செய்யச் சொன்னார்கள். அப்போது தொடங்கியது கிரிக்கெட் பயணம். |
AuthorHi I am Rajan, Web designer. If you want ping with me please contact at mrajan.89@gmail.com Archives
May 2012
Categories
All
|